45 வயதில் அமெரிக்க ஓபன் போட்டிக்கு வருகிறார் வீனஸ்

45 வயதில் அமெரிக்க ஓபன் போட்டிக்கு வருகிறார் வீனஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பங்கேற்பதற்கு வைல்ட் கார்ட் அனுமதியை பெற்றிருக்கும் 45 வயது வீனஸ் வில்லியம்ஸ் கடந்த 44 ஆண்டுகளில் அந்தப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் வயதான வீராங்கனையாக பதிவாகவுள்ளார்.

ஏழு முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றிருக்கும் வீனஸ் வில்லியம்ஸ் 16 மாதங்களில் முதல் முறையாக கடந்த ஜூலையில் நடந்த வொஷிங்டன் ஓபன் போட்டியில் பங்கேற்று முதல் சுற்றுப் போட்டியிலும் வெற்றியீட்டினார். எனினும் இரண்டாவது சுற்றில் அவர் வெளியேறினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் 24 ஆம் திகதி நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ளது. இதில் 1981 இல் ரெனீ ரிச்சட்ஸ் 47 வயதில் பங்கேற்ற பின்னர் ஆடவுள்ள மிக வயதானவராக வீனஸ் இடம்பெறவுள்ளார்.

தற்போது தரவரிசையில் 577 ஆவது இடத்தில் இருக்கும் வீனஸ், 2023 அமெரிக்க ஓபனுக்கு பின்னர் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் பங்கேற்கும் முதல் சந்தர்ப்பமாகவும் இது அமையவுள்ளது. வீனஸ் வில்லியம்ஸ் 2000 மற்றும் 2001 அமெரிக்க ஓபன் ஒற்றையர் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

Share This