ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் பௌத்த பீடத்திலிருந்து நீக்கம்

ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் பௌத்த பீடத்திலிருந்து நீக்கம்

ராஜாங்கனே சத்தாரத்ன தேரரை பௌத்த பீடத்திலிருந்து நீக்க ராமன்ய பிரிவு தீர்மானித்துள்ளது.

அவர் யூடியூப் சேனலை நடத்தி ஆபாசமான அறிக்கைகளை வெளியிடுகிறார் என்ற குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அவர் பௌத்த பீடத்திலிருந்து நீக்கப்பட்டமை பாதுகாப்பு அமைச்சு, பௌத்த அமைச்சு மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றில் ராமன்ய பிரிவு இன்று இதனை தெரியப்படுத்தியுள்ளது.

யூடியூப் சேனலை நடத்தும் போது ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு நாயக்க தேரர்கள் ஒழுக்காற்றுக் குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர்கள் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு துறவறத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This