வெலே சுதாவுக்கு கடூழிய சிறைத்தண்டனை – சொத்துகளை பிறமுதல் செய்யவும் உத்தரவு

வெலே சுதாவுக்கு கடூழிய சிறைத்தண்டனை – சொத்துகளை பிறமுதல் செய்யவும் உத்தரவு

போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் சமந்த குமார அல்லது வெலேசுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஹெராயின் கடத்தல் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்திகே இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

கூடுதலாக, பிரதிவாதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்து, பணம் மற்றும் தங்கப் பொருட்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

CATEGORIES
TAGS
Share This