
கொள்ளுப்பிட்டியில் வாகன விபத்து – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது தனியார் பேருந்தொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
பேருந்து சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என கூறப்படுகிறது.
காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES இலங்கை
