
பம்பலப்பிட்டியில் வாகன விபத்து – ஐவர் வைத்தியசாலையில்
பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 02 மோட்டார் வாகனங்கள் மீது, லொற ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்ற லொரியின் வேகமே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த லொறி மோட்டார் வாகனங்களுடன் மோதி ரயில் வீதியை நோக்கிச் சென்று, இறுதியாக ரயில் தண்டவாளத்தில் நின்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பம்பலப்பிட்டி பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
