வீட்டைக் கட்டும்போது இந்த வாஸ்து ரொம்ப முக்கியம்

ஒரு வீட்டைக் கட்டும்போது அதன் தலைவாசலை உச்ச நிலையில் இருக்குமாறு தான் அமைக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. காரணம், தலைவாசல் அமைக்கும்போது அது குடும்பத்தினரின் ஆரோக்கியம், செல்வம், சௌபாக்கியம் ஆகியவற்றின் ஒரு வாசலாக காணப்படுகிறது.
அதுமட்டமின்றி வீட்டில் படிக்கட்டுகளை அமைக்கும்போது சிவப்பு நிறத்தில் 3,5,7,9 என ஒற்றைப்படையில் அமைக்க வேண்டும்.
கிழக்கு திசையை பார்த்தபடி இருக்கும் வீடுகள் சுக்கிர பகவானுக்கு உரியதாகும். இவ்வாறான வீடுகளில் வசிப்பவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள்.
அதேபோல் வடக்கு திசையில் தலைவாசல் அமைப்பதால் புதன் மற்றும் குபேரனின் ஆசிர்வாதம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.