நாளை முதல் ஓடிடி தளத்தில் ‘வணங்கான்’ திரைப்படம்

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் திரைப்படம் ஜனவரி 10 ஆம் திகதி ரிலீஸானது.
அதில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இப் படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அருண் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் இப் படம் சிறந்த படம் எனும் பட்டியலில் நிச்சயம் இடம்பிடிக்கும்.
இந்நிலையில் வணங்கான் திரைப்படம் நாளை முதல் TENTKOTTA எனும் ஸ்ட்ரீமிங் தளத்தில் திரையிடப்படவுள்ளது.