அமெரிக்காவின் வரி விதிப்பு – நாளை ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு

அமெரிக்காவின் வரி விதிப்பு – நாளை ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு இலங்கையிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாய நிலைகள் உருவாகியுள்ளன.

கடந்த 2ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அறிவிப்பின் பிரகாரம் இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டது.

இந்த வரி விதிப்பு இலங்கையின் ஆடை உற்பத்தி துறை உற்பட பல்வேறு பொருட்களின் ஏற்றுமதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்புலத்தில் இதுகுறித்து கலந்துரையாட சர்வக்கட்சி கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைபை்பு விடுத்துள்ளார்.

நாளை வியாழக்கிழமை ஜனாதிபதி தலைமையில் இந்த சர்வக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளதுடன், எதிர்க்கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.

12 எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இந்தக் கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

Share This