
உக்ரைன் மற்றும் ரஷ்ய தூதுக்குழுவை சந்திக்கும் அமெரிக்க இராணுவ அதிகாரி
ஜெனீவாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, “அமைதிக்கான பாதையை உண்மையானதாக்கக்கூடிய பல வாய்ப்புகளை நாங்கள் காண்கிறோம்” என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் மூவர் கொலை செய்யப்பட்டதாகவும் 10 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்யா கூறுகிறது.
கியேவ் மீது ரஷ்யா இரவு முழுவதும் நடத்திய குண்டுத் தாக்குதலில் ஏழு பேர் கொலை செய்யப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதேவேளை, உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து வந்த தூதுக்குழுவை அமெரிக்க இராணுவ அதிகாரி அபுதாபியில் சந்திக்க உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
CATEGORIES உலகம்
