ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்க விசேட அறிவிப்பு

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்க விசேட அறிவிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் நேற்று காலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசாங்கத்தால் பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் குறித்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவும், விழிப்புடன் இருக்கவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கப் படைகள் இஸ்ரேல் படைகளுடன் இணைந்து தாக்குதல் நடத்தியதை அடுத்து ஈரானில் இருந்து மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், புதிய தாக்குதல்களால் எந்த இலங்கையருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று தூதுவர் நிமல் பண்டார தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இஸ்ரேலில் இருந்து எகிப்துக்கு தப்பிச் சென்ற நான்கு இலங்கையர்கள் எகிப்தியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் கெய்ரோவிற்கான இலங்கைத் தூதர் சிசிர செனவிரத்னவின் தலையீட்டைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டனர்.

இதன்படி, குறித்த நான்கு இலங்கையர்களும் கெய்ரோ விமான நிலையத்தை பாதுகாப்பாக அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )