அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த அமெரிக்க உதவிச் செயலாளர்

அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த அமெரிக்க உதவிச் செயலாளர்

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் தென்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்புக் குறித்து தனது எக்ஸ் பக்கதில் பதிவிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்,

இலங்கையின் மீட்புக்கு முக்கிய பங்காற்றிய யுஎஸ் எய்ட் மற்றும் அமெரிக்க திறைசேரி திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் சந்திப்பை மேற்கொண்டார்.

இதன்போது, இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடினோம்.

இலங்கையின் மக்கள் நலனுக்காக பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை ஆதரிக்கத் தகுந்த திட்டங்கள், திறன் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் மூலம் நாம் இணைந்து செயல்படக்கூடிய வழிகளை இதன்போது ஆராய்ந்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This