போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க – ரஷ்ய தூதரக முயற்சிகள் தீவிரம்

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க – ரஷ்ய தூதரக முயற்சிகள் தீவிரம்

தென்கிழக்கு உக்ரைனின் சபோரிஜியா பகுதியில் ரஷ்யா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

உக்ரைனின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ரஷ்ய படையினர் பல்வேறு திசைகளில் முன்னேறிவருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்கா மற்றும் ரஷ்ய தூதரக முயற்சிகளும் தீவிரமாக  முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் கலந்துரையாட விசேட தூதுவர் ஸ்டீவ் விட்காப்பை மொஸ்கோவுக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

உக்ரைனும் அமெரிக்க முன்மொழிவின்  முக்கிய அம்சங்களை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே, உக்ரைனுக்கு சமாதானம் தேடும், அமெரிக்க முயற்சிகளை ஐரோப்பிய அரசியல் வட்டாரங்களும் ஊடகங்களும் குறை மதிப்பிற்குட்படுத்த முயற்சிப்பதாக  ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சுமத்தியுள்ளது.

 

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )