வர்த்தக இடைநிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா மற்றும் சீனா இணக்கம்

வர்த்தக இடைநிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா மற்றும் சீனா இணக்கம்

அமுலில் உள்ள 90 நாள் வர்த்தக இடைநிறுத்தத்தை நீட்டிக்க தேவையான பணிகளைத் தொடர்வதற்கு அமெரிக்காவும் சீனாவும ஒப்புக்கொண்டுள்ளன.

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் இரு தரப்பு உயர் அதிகாரிகளும்  வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக 02 நாட்கள் கலந்துரையாடினர்.

இந்நிலையில் இந்த கலந்துரையாடல் ஆக்கபூர்வமானவை என அமெரிக்கா மற்றும் சீனாவின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெய்ஜிங்கும் வொஷிங்டனும், வரி நடவடிக்கைகள் தொடர்பான பதிலடி நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சீனாவின் வர்த்தக பேச்சுவார்த்தை பிரதிநிதி லி செங்காங் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த இடைநிறுத்தத்தை பாதுகாக்கப்பதாக இரு தரப்பும் உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பே இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

மே மற்றும் ஜூன் மாதங்களில் பெய்ஜிங் மற்றும் வொஷிங்டன் இடையே ஆரம்ப ஒப்பந்தங்கள் எட்டப்பட்டதையடுத்து, வாரந்தோறும் அதிகரித்து வரும் வரிகள் மற்றும் வர்த்தகம் போன்ற விவாதங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்த கலந்துரையாடல் நடைபெறுகிறது.

 

Share This