பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பை சந்தித்த அமெரிக்க தூதுவர்

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பை சந்தித்த அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இடையிலான சந்திப்பொன்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது.

இதன்போது பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்கே.வி.சமந்த வித்தியாரத்ன, அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இச் சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகள் மற்றும் பெருந்தோட்ட பயிர்கள் உற்பத்தி, அதன் ஏற்றுமதி, போன்றவற்றின் நிலைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மலையக மக்களின் காணி உரிமை, வீட்டு திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவு முறை, தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடது.

வரிய மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டம், அமெரிக்க அரசு இலங்கைக்கு வழங்கும் உதவிகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இருவரும் இதன்போது கலந்துரையாடினர்.

இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருவதாகவும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்  பிரதி அமைச்சிடம் தெரிவித்துள்ளார்.

Share This