யேமனில் அமெரிக்க விமானத் தாக்குதல் – 53 பேர் உயிரிழப்பு

யேமனில் அமெரிக்க விமானத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் ஐந்து குழந்தைகளும் அடங்குவதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
செங்கடலில் அமெரிக்க மற்றும் பிற கப்பல்கள் மீது ஹவுத்திகள் தாக்குதல்கள் மற்றும் கடத்தல்களை அதிகரிப்பதற்கு பதிலளிக்கும் விதமாக, சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா நேற்று அறிவித்தது.
இந்தத் தொடர் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஹவுத்தி தலைவர் அப்துல் மாலிக் அல்-ஹவுத்தி, அமெரிக்கா யேமன் மீதான தாக்குதல்களை நிறுத்தும் வரை செங்கடலில் அமெரிக்க கப்பல்களை குறிவைத்து ஹவுத்தி போராளிகள் தாக்குதல் நடத்துவதை நிறுத்த மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், யேமனில் ஹவுதி போராளிகள் கப்பல்களைத் தாக்குவதை நிறுத்தும் வரை குறிவைத்து தாக்குதல்கள் தொடரும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.