
டெல்சி ரோட்ரிகஸ் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய கட்டமைப்பாளர் – மச்சாடோ விசனம்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை ட்ரம்ப் நிர்வாகம் கடத்தியதை அமெரிக்காவின் நட்பு நாடுகள் உட்பட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை உறுப்பினர்கள், கண்டித்துள்ளனர்.
நிக்கோலஸ் மதுரோ நியூயோர்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் தான் ஒரு போர்க் கைதி என்றும், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் குற்றமற்றவர் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, வெனிசுலா துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் நாட்டின் இடைக்காலத் தலைவராகப் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் டெல்சி ரோட்ரிகஸை எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ விமர்சித்துள்ளார்.
அவர் “சித்திரவதை, துன்புறுத்தல், ஊழல், போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றின் முக்கிய கட்டமைப்பாளர்களில் ஒருவர் என மச்சாடோ குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் வெனிசுலாவுக்கு எதிராகவும், கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவுக்கு (Gustavo Petro) எதிராகவும் மேலும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
