தமிழர்களுக்கு நீதியையும், அரசியல் தீர்வையும் வழங்க வேண்டும்

தமிழர்களுக்கு நீதியையும், அரசியல் தீர்வையும் வழங்க வேண்டும்

தமிழ் மக்களுக்கு நீதியையும், நிலையான அரசியல் தீர்வையும் வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வரவேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

“ யாழ். தையிட்டி காணி உரிமையாளர்கள் அறவழியிலேயே போராடினார்கள். ஆனால் அவர்கள்மீது பொலிஸார் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டனர்.

வேலன் சுவாமிகள் மிக மோசமாகக் கைது செய்யப்பட்டார். பொலிஸார் அராஜகத்தில் ஈடுபட்டனர். பௌத்த துறவியொருவரை இவ்வாறு கைது செய்ய முடியுமா?” எனவும் ஸ்ரீதரன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

நீங்கள் இந்து ஆலயங்கள், கத்தோலிக்க தேவாலயங்களை இடித்து அழிக்கின்றீர்கள், அப்படியானால் வலுக்கட்டாயமாக கட்டப்பட்ட புத்த விகாரையை இடிக்க முடியாதா?

வடக்கு, கிழக்கில் இராணுவம் இன்றளவிலும் குவிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றுங்கள். தமிழர்களுக்கு நீதியையும், நியாயமான தீர்வையும் வழங்க முன்வாருங்கள்.” – என சிறிதரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )