கொழும்பு மாநகரசபைக்கு பொது சின்னத்தில் களமிறங்கும் ஐதேக

உள்ளுராட்சிசபைத் தேர்தலின்போது மிக முக்கிய சபையாகக் கருதப்படுகின்ற கொழும்பு மாநகரசபைக்கு பொது கூட்டணியாக களமிறங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்க்கின்றது என்று முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் பொது பட்டியலின்கீழ் போட்டியிட எதிர்பார்க்கின்றோம். இதற்குரிய முயற்சி இடம்பெறுகின்றது. எனவே, இறுதி பட்டியல் இன்னும் தயாரிக்கப்படவில்லை. குறிப்பாக கொழும்பு மாநகரசபைக்கு பொது சின்னத்தின்கீழ் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். ஓரிரு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும்.” – என்றார்.