
மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகம்
நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதிக மழை வீழ்ச்சி காரணமாக மஹாவலி கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால், பேராதனை அரச தாவரவியல் பூங்காதற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பல தாழ்வான பகுதிகளும் வெள்ளத்தால் நிரம்பியுள்ளது.
அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
CATEGORIES இலங்கை
