இலங்கைக்கு உதவ தயாராகும் யுனெஸ்கோ

இலங்கைக்கு உதவ தயாராகும் யுனெஸ்கோ

டிட்வா (Ditwah) சூறாவளியினால் இலங்கையின் உலக பாரம்பரிய தளங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடுவதற்கு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு தனது ஆதரவை வழங்க முன்வந்துள்ளது.

சீகிரியா, கண்டி மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட முக்கிய வரலாற்றுத் தலங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டறிந்து, அவற்றை மீளச் சீரமைப்பதற்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும்.

தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொரு தளத்திற்கும் ஏற்பட்ட சேதங்கள் குறித்த இறுதி அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் யுனெஸ்கோவிற்கும் இடையில் தொடர்ச்சியான தொடர்பாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )