ஆயுதங்களுடன் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்கள் சிறப்புப் பணிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 19 ஆம் திகதி கம்பஹாவில் நடத்தப்பட்ட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர், இதன்போது இரண்டு சந்தேக நபர்கள் முதலில் இரண்டு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அதே கும்பலுடன் தொடர்புடைய மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், “கம்பஹா ஒஸ்மான்” என்று அடையாளம் காணப்பட்ட ஒருவரை படுகொலை செய்ய இந்தக் குழு திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
சந்தேக நபர்கள் தற்போது தடுப்பு காவலில் உள்ளதுடன், விசாரணைகள் நடந்து வருகின்றன.