இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் – ஐநா கடும் கண்டனம்

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் – ஐநா கடும் கண்டனம்

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஆறு பத்திரிகையாளர்கள் படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தக் கொலைகள் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் அல் ஜசீரா நிருபர் ஒருவர் மற்றும் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.

முக்கிய இலக்கான அல் ஜசீரா நிருபர் அனஸ் அல்-ஷெரிப், ஹமாஸ் பயங்கரவாதப் பிரிவின் தலைவர் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.

ஊடக உரிமைக் குழுக்களும் கத்தார் உட்பட பல நாடுகளும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளன.

இந்தத் தாக்குதலால் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக பிரித்தானிய பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுக்கின்றனர்.

காசா நகரில் உள்ள அவர்களது கூடாரத்தின் மீது இலக்கு வைக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர், அவர்களின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன.

இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்லைனில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு பத்திரிகையாளர் அனஸ் அல்-ஷெரிப் ஆவார்.

எல்லைகளற்ற ஊடக ஆர்வலர் குழுவான Reporters Without Borders, ஷெரிப்பின் கொலையை கடுமையாகக் கண்டிப்பதாகக் கூறியது. மேலும் பல ஊடகக் குழுக்கள் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளன.

Share This