40 ரஷ்ய இராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அறிவிப்பு

நடந்த ஆளில்லா விமான தாக்குதலில் 40 ரஷ்ய இராணுவ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் உள்நாட்டுப் பாதுகாப்பு நிறுவனமான உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU), Tu-95 மற்றும் Tu-22 போர் விமானங்கள் மீது தாக்குதலை நடத்தியதாகக் கூறியது. சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
இதற்கிடையே, உக்ரைன் இராணுவ பயிற்சி மையத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 12 வீரர்கள் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.50 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்தது.
இந்த சம்பவம் குறித்து உக்ரைன் விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளது. ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, உக்ரைன் இராணுவ வீரர்கள் பெருமளவில் ஒன்றுகூடுவதைத் தடை செய்துள்ளது.
இதனிடையே, உக்ரைனின் வடக்குப் பகுதியில் உள்ள சுமியில் உள்ள ஒலெக்ஸியேவ்கா கிராமத்தைக் கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
ரஷ்ய படைகளின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து, சனிக்கிழமை சுமியில் உள்ள 11 பகுதிகளை விட்டு மக்களை வெளியேறுமாறு உக்ரைன் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.