ஹமாஸுக்கு ஆதரவு திரட்டிய இங்கிலாந்து மருத்துவர் கைது

ஹமாஸுக்கு ஆதரவு திரட்டிய இங்கிலாந்து மருத்துவர் கைது

ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக இங்கிலாந்தின் தேசிய சுகாதாரச் சேவை பெண் மருத்துவர் ரஹ்மே அலத்வான் மீது நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தெற்கு குளோசெஸ்டர்ஷையரின் பில்னிங்கில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக நான்கு குற்றச்சாட்டுகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகள் கடந்த ஆண்டு ஜூலை 23 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில், இணையத்தில் அவர் பதிவிடப்பட்ட கருத்துகள் மற்றும் உள்ளடக்கம் தொடர்பானவை என்றும் லண்டன் பெருநகர காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )