UEFA நேஷன்ஸ் லீக் – டென்மார்க்கை வீழ்த்தி போர்ச்சுகல் அபரா வெற்றி

UEFA நேஷன்ஸ் லீக் – டென்மார்க்கை வீழ்த்தி போர்ச்சுகல் அபரா வெற்றி

UEFA நேஷன்ஸ் லீக்கில் வலுவான அணிகளான போர்ச்சுகல் மற்றும் ஜெர்மனி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன.

கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி டென்மார்க்கை 5-2 என்ற கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன.

முதல் லெக்கில் ஒரு கோலில் தோற்றதால் ஏற்பட்ட சோர்வு, போர்ச்சுகல் அணியின் ரசிகர்கள் முன் தெளிவாகத் தெரிந்தது.

இந்நிலையில், போட்டியின் 38வது நிமிடத்தில் ஜோச்சிம் ஆண்டர்சன் அடித்த சொந்த கோல் மூலம் போர்ச்சுகல் முன்னிலை பெற்றது. டென்மார்க் அணி 56வது நிமிடத்தில் ராஸ்மஸ் கிறிஸ்டென்சன் மூலம் பதிலடி கொடுத்தது.

ஆரம்ப பெனால்டியை தவறவிட்ட போதிலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 72வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

டென்மார்க் அணி 76வது நிமிடத்தில் கிறிஸ்டியன் எரிக்சன் மூலம் கோல் அடித்து மீண்டும் சமன் செய்தது. எவ்வாறாயினும் மொத்த கோல் கணக்கில் டென்மார்க் ஒரு கோல் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிவதற்கு நான்கு நிமிடங்கள் மீதமிருந்த நிலையில், போர்ச்சுகல் அணி பிரான்சிஸ்கோ டிரின்காவோ மூலம் ஒரு கோலைப் பெற்றது.

தொடர்ந்து, கூடுதல் நேரத்தின் முதல் நிமிடத்திலேயே டிரின்காவோ மீண்டும் கோல் அடித்து அணிக்கு உதவினார்.

115வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய கோன்சாலோ ராமோஸ், போர்ச்சுகலின் ஐந்தாவது கோலை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

 

Share This