அயலக தமிழர் மாநாட்டை ஆரம்பித்து வைத்த உதயநிதி ஸ்டாலின் – செந்தில் தொண்டமான் பங்கேற்பு
அயலக தமிழர் மாநாடு சென்னையில் இன்று ஆரம்பமாகிய நிலையில் மாநாட்டின் முதன் நிகழ்வாக கண்காட்சியை இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்,தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.