உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிப்பு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில், அயல் வீட்டு உரிமையாளரைத் தாக்கியமை தொடர்பில் வீரதுங்கவுக்கு எதிராக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
எனினும், தலா 10,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் உதயங்க வீரதுங்க இன்று (17) காலை விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.