காசாவுக்கு பாராசூட்டில் ஐக்கிய அரபு அமீரகம் நிவாரணம்

காசாவுக்கு பாராசூட்டில் ஐக்கிய அரபு அமீரகம் நிவாரணம்

காசா பகுதியில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக, விமானம் மூலம் நிவாரணப் பொருள்களை பாராசூட் உதவியுடன் ஐக்கிய அரபு அமீரகம் வீசியுள்ளது.

இதுவரை சுமார் 4,000 டன் உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தவிர, தரை மார்க்கமாக நிவாரணப் பொருள்களுடன் 41 லாரிகளும், மருந்துப் பொருள்களுடன் 12 லாரிகளும் காசா பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையடுத்து, நிவாரணப் பொருள் விநியோகத்துக்கு இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.

Share This