ஒரே உரிமத் தகடு இலக்கத்தைக் கொண்ட இரு வாகனங்கள்
![ஒரே உரிமத் தகடு இலக்கத்தைக் கொண்ட இரு வாகனங்கள் ஒரே உரிமத் தகடு இலக்கத்தைக் கொண்ட இரு வாகனங்கள்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/image_29c638bdf4.jpg)
ஒரே உரிமத் தகடு இலக்கத்தைக் கொண்ட இரண்டு டொயோட்டா பிரியஸ் ரக கார்களை வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு கைப்பற்றியுள்ளது.
ஒரே உரிமத் தகடுடன் இரண்டு கார்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின்படி, இரு கார்களும் தெஹிவளை மற்றும் களனி தலுகம பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக இரு வாகனங்களும் தெஹிவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இரண்டு வாகனங்களில் எது போலியானது என்பதைக் கண்டறிய, கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்திற்கு உண்மைகளை முன்வைத்து, அரசாங்க ஆய்வாளரிடமிருந்து அறிக்கையைப் பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.