அமெரிக்காவால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவந்த இரண்டு திட்டங்கள் ரத்து – எலொன் மஸ்க் அறிவிப்பு

காலநிலை மாற்ற சவால்களை சீராகக் கையாள்வது தொடர்பான ஆசிய பசுபிக் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான தொடர்பாடலை ஊக்குவிக்கும் திட்டங்களை இரத்து செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
SpaceX நிறுவனத்தின் உரிமையாளரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரியுமான எலொன் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அரசாங்க செயற்திறன் திணைக்களத்தின் ஆணையாளராக செயல்படும் எலொன் மஸ்க் இந்த திட்டங்கள் உட்பட உலகளாவிய ரீதியில் 199 திட்டங்களை பயனற்ற திட்டங்களாக கருதி நிறுத்தும் உத்தரவை பிறப்பித்துள்ளார்.