கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இருவர் அடையாளம்

பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்வதற்காக சட்டத்தரணி வேடமணிந்து வந்த இருவர் தொடர்பிலான தகவல்களை கண்டறிய பொலிஸார் முன்வந்துள்ளனர்.
இன்று (19) பிற்பகல் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அழைத்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்விடயங்களை வெளிப்படுத்தினார்.
சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க,
“குறித்த கொலைக்காக துப்பாக்கியை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் பெண் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் ஆவார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரும், துப்பாக்கியைக் கொண்டு வந்த பெண்ணும் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க விமான நிலையத்திற்குத் தேவையான அனைத்து அறிவிப்புகளும் அனுப்பப்பட்டுள்ளன.”
அந்தப் பெண்ணும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.
அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, தொடர்புடைய விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணைகளை நாங்கள் குறுகிய காலத்தில் முடித்து குற்றவாளிகளைக் கைது செய்ய முடியும்.” எனத் தெரிவித்தார்.