ஆவா குழு வினோத் உட்பட இருவர் கைக்குண்டுடன் கைது

ஆவா குழு வினோத் உட்பட இருவர் கைக்குண்டுடன் கைது

ஆவா குழு தலைவன் வினோத் உட்பட இருவர் நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் தெரியவருகையில்,

ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இருவரும் வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This