இனிய பாரதியின் மேலும் இரு சகாக்கள் கைது

இனிய பாரதியின் மேலும் இரு சகாக்கள் கைது

இனிய பாரதியின் மேலும் இரு சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கல்முனையைச் சோந்த டிலக்ஷன் மற்றும் காரைதீவைச் சேர்ந்த  வன்னியசிங்கம் பரமேஸ்வரன் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வன்னியசிங்கம் பரமேஸ்வரன் நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்ததில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் ஜூலை 26ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இனிய பாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கல்முனையைச் சேர்ந்த டிலக்ஷ்ன் என்பவரை நேற்று முன்தினம் சந்தேகத்தின் அடிப்படையில் குற்றப் புலானாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை இனியபாதியின் இன்னெரு சகாவான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையம் சென்ற நிலையில் அங்கு வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரையம் விசாரணைக்காக குற்றப் புலானாய்வு பிரிவினர் கொழும்பிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது._

Share This