ஹசலக – உடவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி

ஹசலக – உடவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி

ஹசலக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிபொல வீதியின் உடவல பிரதேசத்தில் நேற்றிரவு (11) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஹசலகவில் இருந்து ஹெட்டிபொல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் துவிச்சக்கரவண்டியில் சென்றவவரும் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர்.

விபத்தில் மரணித்தவர்கள் 28 மற்றும் 73 வயதுடைய பரவர்தனஓய மற்றும் ஹசலக பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சடலங்கள் தற்போது மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share This