தேஷ்பந்து தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட இருவர் கைது

தேஷ்பந்து தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட இருவர் கைது

பணி இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதிக்கும் மார்ச் 19ஆம் திகதிக்கும் இடையில் தேசபந்து தென்னகோனை மறைந்திருக்க உதவிய குற்றத்திற்காக விசேட பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேஷ்பந்து தென்னகோன் 19 நாட்களின் பின்னர் கடந்த 19ஆம் திகதி தனது சட்டத்தரணிகளுடன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார்.

தற்போது, ​​எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேஷ்பந்து கண்டி தும்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கொழும்பு குற்றப்பிரிவின் பொலிஸ் சர்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் உட்பட 08 பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Share This