இருவேறு விபத்துக்களில் பலியான சிறுவர்கள்
வவுனியா உளுக்குளம் மற்றும் மாவனெல்ல பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவனல்லை அம்புலுகல பிரதேசத்தில் மரமொன்றில் இருந்து தவறி விழுந்த 16 வயது சிறுவன் மாவனல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மரம் முறிந்து வீழ்ந்தமையினால் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மாவனல்லை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நேற்று பிற்பகல் உலுக்குளம, 02ஆம் இலக்க பகுதியில் பேருந்து ஒன்றில் மோதி 07 வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவிச்சக்கரவண்டியில் சென்றக் கொண்டிருந்த போது பஸ்ஸொன்று இடித்ததில் 07 வயது சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான சிறுவன் பாவற்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளான்.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.