
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலக்கமைய, யாழ்.நகரை அண்மித்த பகுதிகளில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் மூன்று கிராம் 130 மில்லி கிராம் மற்றும் ஆறு கிராம் 510 மில்லி கிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
CATEGORIES இலங்கை
