வத்தளையில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொளுடன் இருவர் கைது

வத்தளையில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொளுடன் இருவர் கைது

வத்தளையில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று இரவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பு
நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வத்தளை, பங்களாவத்த பகுதியில் வீடொன்றிலிருந்து போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 300 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிராண்ட்பாஸைச் சேர்ந்த 43 மற்றும் 49 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் சந்தேகநபர்களை வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share This