விமான நிலையத்தில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

விமான நிலையத்தில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தின் பொங்கொக்கில் இந்த போதைப்பொருள் தொகையை கொள்வனவு செய்து, இந்தியாவின் புது டெல்லிக்கு சென்று, ஏர் இந்தியா விமானம் AI-277 ஊடாக
சந்தேகநபர்கள் இன்று காலை 6.50 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட குஷ் போதைப்பொருள் சுமார் 05 கிலோ கிராம் நிறையுடையது என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பைச் சேர்ந்த 29 வயதான பெண் ஒருவரும் தமிழகத்தின் சென்னையை சேர்ந்த 48 வயதான நபர் ஒருவருமே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share This