போதைப் பொருளுடன் இருவர் கைது
பத்தாயிரத்து எழுநூற்று இருபது மில்லிகிராம் ஐஸ் (10720) போதைப் பொருளுடன் இருவரை பதுளை விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
19 வயதுடைய பதுளை இங்கமருவ பகுதியை சேர்ந்தவர் எனவும் அவரிடம் இருந்து 5400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் மற்றைய நபர் பதுளை வீரியபுர பகுதியில் வசிக்கும் 19 வயதுடையவர் எனவும் அவரிடம் இருந்து 5320 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இங்கமருவ மற்றும் வீரியபுர பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் பணிப்புரையின் பேரில், பதுளை தலைமைக் பொலிஸ் நிலைய பதில் பிரதான பொலிஸ் பரிசோதகர் சானக சிரஞ்சிவ விஜேரத்ன, உபோப திஸாநாயக்க போஸா சுஜிவ (46592), போசா திஸாநாயக்க (74416), பொகோ சமிர (74503), போகோ விரசிங்க (85575) ), போகோ சம்பத் (79249) மற்றும் பொகோ திலகரத்ன (12560) ஆகியோர் சந்தேக நபர்களை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை விசாரணையின் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.