உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இரு வேறு பகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கிகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று மாலை அரலகங்வில பொலிஸ் பிரிவின் கஜுவத்த மற்றும் சீகிரிய பொலிஸ் பிரிவின் இலுக்வல பகுதியில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டனர்.

இதன்போது சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன், உள்நாட்டு துப்பாக்கிகள் இரண்டையும் பறிமுதல் செய்தனர்.

அரலகங்வில கஜுவத்த மற்றும் சீகிரிய இலுக்வல பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 44 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்கா சந்தேக நபர்கள் அரலகங்வில மற்றும் சீகிரிய பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

CATEGORIES
TAGS
Share This