210 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த இருவர் விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடக 210 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த இரண்டு பயணிகளை குற்றப் புலனாய்வுத் துறை (CID) கைது செய்துள்ளது.
சந்தேக நபர்கள் வாகன உதிரி பாகங்களுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கொண்டு வந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களில் கொழும்பு, கிராண்ட்பாஸைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரும், கண்டி, ரம்புக்வெல்லவைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும் அடங்குவர்.
இந்த இருவரும் வணிகர்களின் தேவைகளின் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருட்களை விமானம் மூலம் இந்த நாட்டிற்கு கொண்டு வரும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இருவரும் நேற்று காலை (மே 15) காலை 8.30 மணிக்கு துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK-650 மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
சோதனையின் போது, சுங்க அதிகாரிகள் பயணிகளின் பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6.7 கிலோகிராம் எடையுள்ள தங்கத்தை மீட்டனர்.
இன்று அதிகாலையில், மீட்கப்பட்ட தங்கத்துடன், சந்தேக நபர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள இலங்கை சுங்க அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.