
லொட்டரி திட்டத்தின் மூலம் பொதுமக்களை ஏமாற்றி 10 மில்லியன் ரூபா மோசடி – இருவர் கைது
சமூக ஊடகங்களில் ‘டயலொக் மெகா வாசனா’ எனும் போலி லொட்டரி திட்டத்தின் மூலம் பொதுமக்களை ஏமாற்றி 10 மில்லியன் ரூபா
மோசடி செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வடக்குப் பிரிவின் அதிகாரிகளால் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் நேற்றைய தினம்
கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் இருவரும் மட்டக்களப்பைச் சேர்ந்த 29 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
