ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டிச் சென்ற இருவர் கைது

ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டிச் சென்ற இருவர் கைது

கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி ஒரே திசையில் ஆபத்தான முறையில் அதிவேகமாகச் சென்ற இரண்டு தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் இருவர் நேற்று (06) இரவு ஹட்டன் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு பேருந்துகளும் கண்டி பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு சந்தர்ப்பங்களில் தங்கள் பயணத்தைத் தொடங்கியிருந்தன.

இரண்டு பேருந்துகளின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களும் ஆபத்தான முறையில் அதிவேகமாக பேருந்தை ஓட்டுவதை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

குறித்த காணொளி ஹட்டன் பிரிவு பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகரவிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட பொலிஸார், இரு ஓட்டுநர்களையும் கைது செய்தனர்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கும் எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This