கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசமாக தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசமாக தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம்

துருக்கி ஏர்லைன்ஸுக்குச் (Turkish Airlines) சொந்தமான TK 733 ரக விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (17) அதிகாலை 12.28 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

​நேற்று (16) இரவு 10 மணியளவில் கட்டுநாயக்கவில் இருந்து துருக்கி நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதன் தரையிறங்கும் சக்கரத் தொகுதியில் (Landing Gear) கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாகத் தரையிறங்குவது அபாயகரமானது என்பதால், விமானத்திலுள்ள எரிபொருளின் எடையைக் குறைப்பதற்காக நீர்கொழும்பு கடல் பகுதிக்கு மேலாக சுமார் 4,000 அடி உயரத்தில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக விமானம் வட்டமிட்டுப் பறந்துள்ளது.

​விமானத்தில் இருந்த 202 பயணிகள் மற்றும் 10 ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், விமானி அதிகப்படியான எரிபொருளைக் கடலில் கொட்டிவிட்டு, விமானத்தின் வேகத்தைக் குறைத்துத் தரையிறக்கத் தயாராகியுள்ளார்.

இந்த அவசரத் தரையிறக்கத்தை எதிர்கொள்ள கட்டுநாயக்க விமான நிலையத்திலும் நீர்கொழும்பு களப்புப் பகுதியிலும் அவசர அம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

​மிகவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், விமானியின் சாதுரியமான செயலால் விமானம் எவ்வித விபத்துகளுமின்றி பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

இதனால் பெரும் அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டதாக விமான நிலைய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )