மாலைதீவு வழங்கிய டூனா டின் மீன்கள் இலங்கை அரசிடம் கையளிப்பு

மாலைதீவு வழங்கிய டூனா டின் மீன்கள் இலங்கை அரசிடம் கையளிப்பு

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் நெருங்கிய பிராந்திய ஒத்துழைப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாலைதீவு அரசாங்கம் 25,000 டூனா மீன் டின் பெட்டிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

சுமார் 14 கொள்கலன்களில் அடைக்கப்பட்டிருந்த இந்த டூனா மீன் கையிருப்பு, இன்று மாலை உத்தியோகபூர்வமாக இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டது.

மாலைதீவின் உயர்ஸ்தானிகர் இலங்கை அரசின் பிரதிநிதிகளிடம் இந்த நிவாரணப் பொருட்களைக் கையளித்தார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட அரசின் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்குடன் மாலைதீவு அரசாங்கம் இந்த மனிதாபிமான உதவியை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்கொடையாகக் கிடைத்த இந்த உணவுப் பொருட்கள் விரைவாகவும் முறையாகவும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு வழங்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இந்தக் கையளிப்பு நிகழ்வில், இலங்கை அரசின் சார்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர், பிரிகேடியர் ரொஷான் தர்மவிக்ரம, மேற்கு கடற்பிராந்தியத்தின் பிரதிப் பிராந்திய கட்டளை அதிகாரி, கொமடோர் அருண விஜேவர்தன, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர், டயானா பெரேரா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )