நிஜ வாழ்விலும் ‘ஸ்பைடர்மேன்’ வலை!

நிஜ வாழ்விலும் ‘ஸ்பைடர்மேன்’ வலை!

திரைப்படங்களில் ஸ்பைடர்மேன் தனது கைகளில் இருந்து வலைகளை வீசி கட்டிடங்களில் ஏறுவதைப் பார்த்திருப்போம். இப்போது அமெரிக்காவின் டஃப்ட்ஸ் (Tufts) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதைப் போன்ற ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

பட்டுப்பூச்சி கூடுகளில் இருந்து எடுக்கப்பட்ட ஒருவகை திரவத்தை விசேட ஊசி மூலம் பீச்சும் போது, அது காற்றில் பட்டவுடன் உடனடியாக ஒரு வலுவான கயிறு போல மாறுகிறது. இந்தச் செயற்கை வலை, தனது எடையை விட 80 மடங்கு அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்கும் வலிமை கொண்டது. இது விபத்துக்களின் போது மீட்புப் பணிகளுக்கும் ஏனைய தொழில்நுட்ப வேலைகளுக்கும் எதிர்காலத்தில் பெரும் உதவியாக இருக்கும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )