ரஷ்யா மற்றும் ஜப்பானை சுனாமி தாக்கியது!! இலங்கைக்கு எந்த அச்சுறுத்தல் இல்லை

ரஷ்யா மற்றும் ஜப்பானை சுனாமி தாக்கியது!! இலங்கைக்கு எந்த அச்சுறுத்தல் இல்லை

ரஷ்யா மற்றும் ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்கியுள்ள நிலையில் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் பெரிய வடக்கு தீவான ஹொக்கைடோவின் கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கியுள்ளன.

மேலும், பசிபிக் தீவுகள் மற்றும் அமெரிக்கா முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை அதிகாலை ரஷ்யாவின் தூர கிழக்கில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளனர்.

ஹொக்கைடோவின் கிழக்கு கடற்கரையில் உள்ள நெமுரோவை சுமார் 30 செ.மீ. முதல் சுனாமி அலை எட்டியதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கம்சட்கா தீபகற்பத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள ரஷ்ய பகுதிகளில் சேதம் மற்றும் அங்கிருந்து பொது மக்கள் வெளியேற்றப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பசிபிக் பெருங்கடலில் உள்ள ரஷ்யாவின் குரில் தீவுகளில் உள்ள செவெரோ-குரில்ஸ்க் கடலோரப் பகுதியை முதல் சுனாமி அலை தாக்கியதாக உள்ளூர் ஆளுநர் வலேரி லிமரென்கோ தெரிவித்தார்.

மீண்டும் அலை ஏற்படும் அச்சுறுத்தல் நீங்கும் வரை குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், உயரமான நிலத்தில் தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹவாய், சிலி, ஜப்பான் மற்றும் சாலமன் தீவுகளின் சில கடலோரப் பகுதிகளில் அலை மட்டத்திலிருந்து ஒன்று முதல் மூன்று மீட்டர் உயர அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

மார்ச் 2011 இல் வடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பின்னர் இன்று காலை பதிவான நிலநடுக்கம் மிகவும் வலிமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

Share This