ட்ரம்பின் வர்த்தக ஒப்பந்த அறிவிப்பு – ஜப்பான் பிரதமர் வரவேற்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக ஒப்பந்த அறிவிப்பை ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா வரவேற்றுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஜப்பான் இடையே முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் அமெரிக்காவில் 550 பில்லியன் டொல்ரகளை முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும், 15 வீத பரஸ்பர வரியை செலுத்தும் என்றும் அவர் குறிப்பட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜப்பான,; அமெரிக்க பொருட்களுக்கு தனது சந்தையை திறக்கவுள்ளது. இதில் கார்கள் லொறிகள் அரிசி மற்றும் விவசாய பொருட்கள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்குப் பெரும் வெற்றி என்றும் ஜப்பானுடன் எப்போதும் சிறந்த உறவுகளை வைத்திருப்போம்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் அறிவிப்பு நாட்டின் மோட்டார் துறைக்கு ஒரு ஊக்கமாக கருதப்படுவதால், ஜப்பானின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்களின் பங்குகள் உயர்வடைந்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.