ஐரோப்பிய நாடுகள் மீது விதித்த வரிகளை 100 வீதம் நிறைவேற்றுவதாக ட்ரம்ப் உறுதி

ஐரோப்பிய நாடுகள் மீது விதித்த வரிகளை 100 வீதம் நிறைவேற்றுவதாக ட்ரம்ப் உறுதி

கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது வரிகளை விதிக்கப்போவதாக விடுத்த அச்சுறுத்தலை 100 வீதம் நிறைவேற்றுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட எட்டு நேட்டோ உறுப்பு நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்கள் மீது, எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 10 சதவீத வரியும், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 25 சதவீத வரியும் விதிக்கப்படவுள்ளது.

இதனிடையே, நோபல் அமைதிப் பரிசு தனக்கு வழங்கப்படாததற்கு நோர்வேதான் காரணம் என ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளதுடன், அமைதி பற்றி இனி தான் சிந்திக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள டென்மார்க் மற்றும் பிரித்தானியா, கிரீன்லாந்தின் எதிர்காலத்தை அந்த மக்களும் டென்மார்க்கும் மட்டுமே தீர்மானிக்க முடியும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரத்தைக் கையாள ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வரும் வியாழக்கிழமை அவசர உச்சி மாநாட்டைக் கூட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )